தையல் கலைப் பொருட்கள்



தையல் பொருட்கள் :

           இப்பொழுது ஒரு தையல் மெஷின் உங்கள் வீட்டிற்கு வந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம் . பிறகு என்னென்ன பொருட்கள் தையல் கலையை பழகுவதற்கு தேவை என்பதை பற்றி பார்ப்போம்.

 1 . புதிய மட்டித் துணி அல்லது புதிய குறைந்த விலை துணி அல்லது பழைய கிழிந்த வீட்டில் உள்ள துணி
 2 . அங்குல நாடா.
 3 . ஸ்கேல்
 4 . வண்ணக்கட்டி
 5 . பென்சில்
 6 . இரப்பர்
 7 . கத்திரிகோல்
 8 . ஊசி
 9 . பாபின்கேஸ்
 10 . பட்டன் பாக்ஸ்
 11 .லூஸ் பெட்டி

தையல் பழக தேவையான பொருட்கள்

மட்டித்துணி :

        முதன் முதலில் தையல் பயில்பவர்கள்  தைப்பதற்கு புதிய விலை  உயர்ந்த துணிகளை பயன் படுத்தி  தவறுகள்  செய்து , விலை உயர்ந்த உடைகளை வீணடிக்காமல், முதலில் புதிய விலை குறைவான மட்டித்துணிகளை கடைகளில் வாங்கி, அல்லது விலை குறைந்த துணிகளை கடைகளில் வாங்கி , அல்லது வீட்டில் உள்ள பழைய கிழிந்த துணிகளையும் பயன்படுத்தலாம்.


அங்குல நாடா :

  அங்குல நாடாவில் (inc tape ) ஒரு புறம் செண்டிமீட்டரில்  எண்கள் பொறிக்கப் பட்டு இருக்கும் . அங்குல நாடாவின் 150 செண்டிமீட்டராகவும் , அங்குல எண்கள் '53 ' ஆகவும் பொறிக்கப்பட்டு இருக்கும்.

ஸ்கேல் :

  1 அடி ஸ்கேலில் 12 இஞ்ச் அல்லது 30 சென்டிமீட்டர் பாதிக்கப்பட்டு இருக்கும் . இது வரி வடிவம் வரைவதற்கு துணியிலும் மற்றும் காகிதத்திலும் வரைவதற்கு பயன்படுகிறது .

பென்சில் :

   காகிதத்தில் மற்றும் துணிகளில் மேம்போக்காக  வரிவடிவங்கள் வரைவதற்காகப் பென்சில் பயன் படுகிறது.

இரப்பர் :

    காகிதத்தில் மற்றும் துணியில் பென்சிலினால் வரைந்ததில் தேவையற்ற பாகத்தை அழிப்பதற்கு இரப்பர் பயன் படுகிறது.

கத்திரிக்கோல் :

   தையல்கலை பழக ஒரு பெரிய கத்திரிக்கோல்   மற்றும் சிறிய கத்திரிக்கோல் அவசியம் . பெரிய துணியினை அளவுகளுக்கு ஏற்ப தைப்பதற்கு இதமாக வெட்டுவதற்கு பெரிய வகை கத்திரிக்கோல் பயன்படுகிறது
  தைத்து முடித்தவுடன் பிசிராக உள்ள அதிகபபடியான  நூலினை வெட்டுவதற்கும் , காகிதத்தில் வரைந்த அளவுப் படங்களை வெட்டுவதற்கும் , சிறிய வகை கத்திரிக்கோல் பயன்படுகிறது.


ஊசி :

   தையல் வேலையில் ஊசி  மிகவும் உதவியாக இருக்கிறது. இதில் இரண்டு வக்சி உள்ளது. ஒன்று கைத் தையலுக்கு உதவும் கைத்தையல் ஊசி, மற்றொன்று இயந்திரத்தில் தைக்க உதவும் தையல் மெஷின் ஊசி. துணியின் அளவுகளை பொறுத்து மெஷின் ஊசி பலவகைப்படும்.
 தையல் ஊசி மற்றும் தையல் நூல் தேர்வு செய்வது எப்படி ? என்று விரிவாக இந்த நூலில் 12 -ம்   பகுதியில் விளக்கப்பட்டு உள்ளது.
 தையல் வேலைகள் முடிந்த உடன் காஜா எடுத்து பட்டன் மற்றும் ஊக்கு அல்லது கொக்கி  தைக்க கைத் தையல் ஊசி பயன் படுகிறது.

பாபின்கேஸ் :

   பாபினில் சுற்றப்பட்டுள்ள நூலானது பாபின்கேஸ் தூவரத்தின் வழியாக வெளிவருகிற தையல் இயந்திரத்தின் கீழ் புறத்தில் இருந்து வரும் நூல் பாகமாகும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தையல்கலை ஓர் அறிமுகம்.

தையல் இயந்திர பாகங்கள்