இடுகைகள்

சிந்தனை சிற்பி ஓர் அறிமுகம்

படம்
சிந்தனை சிற்பி கே .பாலசுப்பிரமணியன் B.E, M.B.A, M.Phil(Mgt), D.C.P.I.C., P.G.D.F.M., சிந்தனை சிற்பி ஒரு அறிமுகம்: சிந்தனை சிற்பி கே. பாலசுப்ரமணியன் திருச்சியை சேர்ந்தவர். * சிந்தனை சிற்பி பி.இ (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ (மார்க்கெட்டிங்), எம்.ஃபில்(மேலாண்மை) படித்தவர், 1. மேலாண்மை ஆலோசகர்(Management Consultant): சிந்தனை சிற்பி கே. பாலசுப்ரமணியன் கிரியேடிவ் மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தை 1993 ஆம் ஆண்டு தொடங்கி, தற்சமயம் 75க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களுக்கு மேலாண்மை ஆலோசகராக உள்ளார். 2. மேலாண்மை பேராசிரியர்(Management Professor): தமிழகத்தில் 15 க்கும் மேற்பட்ட பல்கலை கழகங்கள், 20 க்கும் மேற்பட்ட கல்லூரிகளூக்கு எம்.பி.ஏ பேராசிரியராக, 40க்கும் மேற்பட்ட மேலாண்மை பாடங்களை போதிக்கிறார். கடந்த 15 ஆண்டுகளில் 10,000 க்கும் மேற்பட்ட எம்.பி.ஏ மாணவர்களை உருவாக்கியவர். UGC - ன் ஆசிரியர் திறன் ஊக்க பயிற்சி முகாமில், இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மேலாண்மை ஆசிரியர்களை உருவாக்கியவர். 3. மனித வள மேம்பாடு பயிற்சியாளர் (Corporate Trainer) மனித

தையல்கலை ஓர் அறிமுகம்.

படம்
                       தையல்கலை ஓர் அறிமுகம் அழகுக்கு அழகூட்டும் கலை:           கலைகளுள் சிறந்த ஒரு கலை தையற்கலை, நல்ல உடையை, விதவிதமான உடைகளை உருவாக்கும் கலையே தையல் கலை. காலப்போக்கில் சில கலைகள் அழியும் தன்மையை பெறுவது இயற்கை, ஆனால் இந்தத் தையற்கலைக்கு என்றென்றும் அழிவே இல்லை என்று உறுதியாகக் கூறலாம். காலத்தால் அழியாத கலை :           உணவு, உடை, இருப்பிடம் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தேவை. ஆகையால் உடை என்ற ஒன்று இந்த உலகம் இருக்கும் வரை இருக்கும். எனவே, தையல் கலை என்ற ஒரு கலை இந்த பூமி சுழன்று கொண்டு இருக்கும் வரை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். அடிப்படை உடை....ஆடம்பர உடை:            அடிப்படைத் தேவையான உடை என்பதைத் தாண்டி, மனிதன் ஆசைவயப்பட்டு, விதவிதமான ஆடையை பேஷனாக உடுத்த ஆரம்பித்தது முதல், விதவிதமான தையல்களின் தேவை அதிகரித்தது. இது எதிர்காலத்தில் மேலும் மக்களின் மனநிலையைப் பொறுத்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். ஆகவே இந்த தையல் கலையில் பணம் ஈட்ட சிறியது முதல் பெரிய வாய்ப்புகள் வரை கொட்டிக் கிடக்கிறது. வளரிளம் பருவப் பெண்ணே, தையற் கலையில் மனம் இ

தையல் கலை வரலாறு

தையல் இயந்திர வரலாறு மற்றும் பிரம்மிக்கத் தக்க தொழில் நுட்ப வளர்ச்சி.

தையல் கலையின் வளர்ச்சி, நேற்று, இன்று, நாளை.

தையல் கலை - நேற்று:            தையல் என்றால் பெண் என்று பொருள். ஆகவே எல்லா பெண்களும் குறிப்பாக வளரிளம் பருவப் பெண்களும் , தையல் கற்றுக் கொள்ள வேண்டும். பண்டைக் காலம் முதல் மனிதன் தனது ஆடையை ஊசியன் துணைக் கொண்டு கையினால் தைத்தான். அது காலப்போக்கில் , விஞ்ஞான வளர்சிக்கு ஏற்ப கைத் தையல் , மெஷின் தையலாக மாற்றம் பெற்றது. தையல் கலையின் வேகமான வளர்ச்சி:           கடந்த 160 வருடத்தில் தையல் மெஷின் வந்ததால் தையல் வேலை குறிப்பாக துணிகள் தைப்பது என்ற வேலை சுலபமானது. துணிகள் தைக்கும் வேகம் அதிகரித்தது. விளைவு , தையல் மெஷினில் தைத்து துணிகளின் விற்பனை வேகம் அதிகரித்தது. தையல் கலை - இன்று:           இன்று தையல் கலை , தையல் தொழிலாக மாற்றம் பெற்று இலட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு   அளிக்கும் கற்பகதருவதாக மாறி உள்ளது. வளரிளம் பெண்களின் கற்பனை வளத்திற்கு ஓர் மிகப் பெரிய வடிகால் தையல் கலை , வீட்டில் இருக்கும் பெண்களுக்கு , ஓரு ஆரோக்கிய பொழுதுபோக்கு தையல்கலை என்று சொன்னால் மிகையாகது. திடீர் உடை அல்லது ரெடிமேட் உலகம்:           இந்த 21 ஆம் நூற்றாண்டில் , விஞ்ஞானம் முன்னேற்றம்

பெண்களின் ஆடை வடிவமைப்பில் உள்ள மிகப் பெரிய தொழில் வாய்ப்புகள்.

  5 . பெண்களின் ஆடை வடிவமைப்பில் உள்ள மிகப் பெரிய தொழில் வாய்ப்புகள். மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் என்னிடம் படித்த ஒரு MBA மாணவரைத் தற்செயலாக சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எல்லா மாணவர்களையும் பார்த்து MBA  பேராசிரியர் என்ற முறையில் சாதாரணமாகக் கேட்பது போல் , அவரிடமும் ' எங்கே வேலை பார்க்கிறீர்கள் ?' என்று நான் கேட்டேன். 5 . 1 படிப்பு... வேலை... தொழில்...              அதற்கு அவர் , மூன்று ஆண்டுகளுக்கு முன் MBA படிப்பை உங்களிடம் படித்து முடித்தவுடன் ஆறு மாதங்களுக்கு ஓரிரு நிறுவனங்களில் வேலை பார்த்த பின் , திருச்சியில் உள்ள எனது தந்தையின் தையல் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு , தற்சமயம் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை முழு நேரப் பணியாக கவனித்துக் கொண்டு இருக்கிறேன் என்றார். 5 . 2 தையல் தொழில் - ஏறு முகம்               நான் எப்படி உங்கள் தையல் தொழில் இருக்கிறது ? என்று அவரைப் பார்த்து மிகச் சாதரணமாக நான் கேட்டேன். நான் அந்த கேள்வியை கேட்கும் போது என் மனநிலை , MBA படித்த மாணவனுக்கு ஒரு தையல் கலையில் என்ன வேலை என்று நினைத்தேன்.          

தையல் கலையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் வாய்ப்புகள்.

தையற்கலையின் நிலைகள் : "சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்' என்ற வாக்கிற்கு இனங்க தையல் கலையைப் பழகப் பழகத் தான் தையல் கலையின் நுனுக்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வளரிளம் பருவப் பெண்ணுக்கு ஆர்வம் பிறக்கும். அத்தகைய ஆர்வத்திலிருந்து தையல் கலையைப் பற்றிய பல்வேறு நுனுக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய தேடுதல் வளரிளம் பருவப் பெண்ணுக்கு ஆர்ம்பம் ஆகும். அத்தகைய தையல் கலை பற்றிய தேடுதலின் விளைவாக, ஒரு வளரிளம் பருவப் பெண் தையல் பயிற்சி என்ற நிலையைத் தாண்டி, தையல் கலை நிபுணராக மாற வேண்டும் என்று செயலில் இறங் குகிறார். தையல் பழகும் போது வளரிளம் பருவம் பெண் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது , யாருக்கு துணியைத் தைக்கப் போகிறோம் என்பது. அதாவது , ஆண்களுக்காகவா அல்லது பெண்களுக்காகவா, வளர் இளம் பருவ ஆடவருக்கா அல்லது பெண்களுக்கா, அல்லது ஆண் குழந்தைகளுக்கா என்று தெரிந்து கொண்டு , புரிந்து கொண்ட பின் அவரவரின் உடல் அமைப்புக்கு ஏற்ற வகையில் தைக்க ஆரம்பிக்க வேண்டும். தையல்க் கலையில் சுய வேலை வாய்ப்பு : கலை ஆர்வமுள்ள ஒவ்வொரு வளரினம் பருவப் பெண்ணும் தையல் கலையைக் கற்று , அத

தையல் இயந்திர பாகங்கள்

படம்
தையல் இயந்திர வளர்ச்சி :            தையல் துறையில் உலகம்   முழுவதிலும்   இருந்து   பல்வேறு   கம்பெனியினர் செய்த தையல் இயந்திரங்கள்  வெளிவந்து வியாபாரரீதியில்   முன்னேற்றம்   அடைந்துள்ளன .           தையற்கலை வளர்ச்சி அடைந்து   வரும் இன்றைய சூழ்நிலையில் தையல் இயந்திரத்தின் வளாச்சி , தையல் தொழில் வாய்ப்பில் ஒரு முக்கியப்   பங்கை வகிக்கிறது . தையல் மெஷின் மிகவும் முக்கியமான தையல் சாதனம் . பலப் பல தையல் மெஷின்கள் சந்தையில் கிடைக்கின்றன .            ஒவ்வொரு தையல் மெஷினிலும் அதற்கென தனியான அம்சங்களும் , பயன்களும் உள்ளன . சாதாரண லாக் தையல் மெஷினில் இருந்து , மிகவும் முன்னேறிய கம்ப்யூட்டர் நுட்பத்தைப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் தையல் மெஷின்கள் வரை பல ரகங்கள் உள்ளன . எலக்ட்ரானிக் தையல் மெஷின்:           எலக்ட்ரானிக் தையல் மெஷின்களில் பைப்பிங் , பைண்டிங் , ரஃப்ள்ஸ் , பிளீட்டிங் , டார்னிங் , ஹொம்மிங் , பட்டன் துளை போடுவது போன்ற பற்பல வேலைகள் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் நடைபெறுகின்றன .           எந்த

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தையல்கலை ஓர் அறிமுகம்.

தையல் இயந்திர பாகங்கள்

தையல் கலைப் பொருட்கள்